அறிவியலுக்கும் ,நாத்திகத்திற்கும் ,ஆத்திகத்திற்கு சவால் விடும் ஒரு பகடிக்காகயாக மாறி நிற்கிறது இயற்கை .
உஷ்ண மூச்சுக்கள் நுரையீரல் நிரப்ப ,
வானம் பார்த்த பூமியாம் என் தாய் தமிழ் நாட்டை பல நாட்களாக வாட்டி, தானம் கேட்கும் நிலைக்கு தள்ளி கொண்டிருக்கிறது மழை .கானல் நீரை மட்டுமே காட்டி செல்கிறது இந்த வெயிலின் தணல்.
விவசாய நிலங்கள் விலை நிலங்கள் ஆகிப்போக, விவசாயிகள் மண்ணின் உரமாக மாறி வரும் காலத்தை சற்றே கனத்த இதயத்துடன் கடந்து கொண்டிருக்கிறேன் .
தென் மேற்கு பருவமழை , வட கிழக்கு பருவமழை போன்ற சொற்கள் வழக்கொழிந்து போய் விட்டன
குளிர் காற்றை கடக்கும் போது அருகில் மரம் இருப்பதை உணர்கிறேன் . வானம் குளிர மரம் அவசியம் என்பதை மறந்து அறிவியலின் கண்டுபிடிப்புகளில் தொலைந்து கொண்டிருக்கிறது அடுத்த தலைமுறை.
இயற்கை தனது பழிவாங்கும் படலத்தை நடத்திக்கொண்டிருக்கிறது .
நாம் இயற்கை வளங்களை அழித்தோம் அது நம்மை ஒழிக்க உக்கிரதோடே நம் முன் நிற்கிறது .
இன்னா செய்தாரை ஒறுத்து நன்னயம் செய்ய மாட்டாயோ மழையே !!
No comments:
Post a Comment