பட்டிணத்தில் நாங்கள்....?????

காலை எழுவதும் ...மாலை உறங்குவதும்....இடையில் எந்த நினைவுகளும் இல்லாமல் உழைப்பதும்....
சில நேரங்களில் முற்றிலும் மறந்தே போய் விட்டோம்....
எங்களுக்கு பல சொந்தங்கள் இருக்கிறது என்பதை....

நாளும் பொழுதும் எங்களுக்கு சொந்த பந்தங்கள் யாரும் இல்லை என்ற நிலையிலேயே கழிகின்றன...
எல்லாரையும் விட்டுவிட்டு அனாதையா உழைத்து கொண்டு இருக்கிறோம் ,பட்டிணத்தில் நாங்கள்...

நாங்கள் வேலைக்கு செல்லும் போது ...பத்திரமா போயிட்டு வாப்பா னு சொல்லறதுக்கு எங்கள் தாய் தந்தையர் எங்களுடன் இல்லை....
போயிட்டு வர்ரேன்-மா என்று சொல்ல வாசலில் எங்கள் அன்னையை எதிர் பார்க்கிறோம் இல்லை...

காலை சாப்பாடு கனவாகி போய்விடும் ....
ஆயிரம் ருபாய்க்கு சாப்பிட்டாலும் அம்மாவின் கை பக்குவம் வருமா ??


காய்ச்சல் தலை வலி என்று தொலைபேசியில் சொல்லும் போதே துடித்து போய் விடுகின்றனர் எங்கள் அப்பாவும் ,அம்மாவும்....
கூட இருந்து பாத்துக்க முடியலையே-னு அம்மா ஒரே அழுகை....

"அய்யா Hospital போங்கய்யா" என்று அவர்கள் சொல்லும் போதே எங்களுக்கு குணமாகி விடும்.....

தொலைபேசியில் எப்படி பாசத்தை காட்ட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியவில்லை...
தொலைபேசி கண்டுபிடிக்கபடாமல் இருந்திருந்தால் ....????? ஐயோ !!!


தாயின் சிரிப்பையும் ...தந்தையின் கோபத்தையும் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது ....
தம்பி, தங்கைகள் எப்படி வளர்ந்தார்கள் என்பதே எங்களுக்கு தெரியாது.....


திடீரென தங்கைக்கு திருமணம் என்று செய்தி வரும் ....திருமண நாள் அன்று விருந்தாளி போல் சென்று வருவோம்....

சொந்த வீடு கட்டி,, அழகு மட்டும் பார்த்தோம் ....


கீழ கல் கெடக்கு பார்த்து போப்பா னு சொல்லுற சொந்தங்களை எல்லாம் விட்டுட்டு ..
அடி பட்டு கெடந்தா கூட கேக்க ஆள் இல்லாத இடத்துல இருக்கிறோம் ...

எங்க ஊர்ல சொல்லுவாங்க ...பைய்யந்தான் வேலைக்கு போயிட்டானே அப்புறம் என்ன சந்தோசம்தான என்று....அவர்களுக்கு என்ன தெரியும் எங்கள் கஷ்டம்.....

நாங்கள் வீட்டில் இருந்து புறப்பட்ட பிறகும் ...வாசலில் நின்று கொண்டு ....
பேருந்தில் நாங்கள் கடந்து செல்லும் போது கையை காட்ட நிற்கும் சொந்தம்....
அடுத்த முறை ஊருக்கு செல்லும் வரை அவர்களின் சிரிப்பை எங்கள் கண்களில் சுமந்து கொண்டு பிணமாக நடமாடுகிறோம்.....

எப்படியும் எங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்க போகிறது என்ற ஏக்கத்துடனும் ...துக்கதுடனுமே நாங்கள் எங்கள்
வாழ்வை கழித்து கொண்டு இருக்கிறோம் ...

மதங்கள் கடவுளை வணங்க திருவிழாக்களை ஏற்படுத்தின.....
சத்தியமாக எங்களுக்குத்தான் திருவிழா....இன்று இரவு ஊருக்கு கிளம்புகிறோம் என்றால்,
நாளைக்கு காலைல வீட்ல சாப்பாடுடா என்ற சந்தோஷத்தில் நாங்கள் கிளம்புவோம்...
அது ஒரு தனி சந்தோசம்... அனுபவித்திருந்தால் தெரியும்.....


சொந்த ஊரில் இருப்பவர்கள் நினைக்கலாம்... இவர்கள் பட்டினத்திலே நல்லாதான இருக்காங்க ...நல்லா சம்பாதிக்கிறாங்க....நல்லா ஊர் சுத்துறாங்க....என்று....

சொந்த ஊரில் தாயின் மடியில் சிறிது நேரம் தலை சாய்த்து இருப்பதை விட ஒரு சந்தோசம் இருக்கிறது என்றால் ....!!!

நாங்கள் சந்தோசமாகவே இருக்கிறோம்.....!!!

MISS MY PARENTS AND MY LOVING RELATIVES.....
Britman Branco A

7 comments: