அரசியலுக்கு பேச்சுக்கள் பேசி அதிகம் பழக்கமில்லை என்றாலும் ,
கடந்த நாட்களில் என்னை அதிகம் பேச வைத்த ஒருவர் கேஜ்ரிவால் .
லோக்பால் பில் என்றால் என்னவென்று தெரியாத நேரத்தில் ,கடந்த நாட்களில் என்னை அதிகம் பேச வைத்த ஒருவர் கேஜ்ரிவால் .
லோக்பால் வந்தால் சுவிஸ் பேங்க் -இல் இருக்கும் கருப்பு பணம் எல்லாம் வெளிவந்து விடும் என்று முகப்புத்தகத்தில் வந்ததெல்லாம் நம்பி, அன்னா ஹசாரே மீது இருந்த மதிப்பும், லோக்பால் மீதிருந்த எதிர்பார்ப்பும், காங்கிரஸ் மீதிருந்த வெறுப்பும் உச்ச கட்டத்தில் இருந்த நாள் அது .அன்னா ஹசாரே வின் உண்ணாவிரதத்தில் பங்கேற்கலாம் நமது ஆதரவையும் தெரிவிக்கலாம் என்ற எண்ணம் வழக்கம் போல எண்ணமாகவே கலைந்தும் போனது.
அன்னா ஹசாரே மீது மத்திய அரசு சொன்ன புகார்கள் அவரது புகழை கொஞ்சம் கொஞ்சம் மறைக்க ஊடகங்களுக்கு அடுத்த தீனி தேவைப்பட்ட நேரத்தில் யாரும் எதிர்பாராமல் முளைத்த , ஊடகங்களால் முளைக்க வைக்கப்பட்ட விதையே அரவிந்த் கேஜ்ரிவால்.
காங்கிரஸ் கட்சியின் ஊழல் அதிகரிக்க அதிகரிக்க கேஜ்ரிவாலின் புகழும் அதிகரித்தது . அரசியலை டீ கடை பெஞ்சில் மட்டுமே வைத்து பேசாமல் தெருவில் இறங்கி பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கேஜ்ரிவால் .
லோக்பால் பில்லுக்கு யாரும் ஆதரவு தரவில்லை என்பதை காரணம் காட்டி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இது அவரின் அரசியல் தந்திரம் என எல்லாரும் சொல்ல எனக்கென்னமோ அப்படி தோணவில்லை .இலங்கையில் தமிழ் மக்களும் மீனவர்களும் செத்து கொண்டிருக்க அதை வைத்து தமிழகத்தில் இருந்து அரசியல் பண்ணியவர்களை பார்த்து வளர்ந்த எனக்கு இவர் செய்தது அரசியல் தந்திரமாக தெரியவில்லை.
பொன்விழா காணும் தமிழக தி.மு.க ,அதிமுக கட்சிகள் தமிழகத்திலேயே முடங்கிப்போக இரண்டு வயது கூட ஆகாத ஒரு கட்சி தேசிய அரசியலில் ஒரு புயலை கிளப்பியது மிக ஆச்சர்யமான விசயம்தான்.
பா ஜ க -வை எதிர்க்கிறார் இன்று. வாரணாசி-யில் மோடி ஜெயிக்க அதிக வாய்ப்பிருகிறது என தெரிந்தும் அங்கு மோடியை எதிர்த்து நிற்கிறார் என்றால் இதை முட்டாள்தனம் என்பதா தைரியம் என்பதா இல்லை விளம்பர யுக்தி என்பதா தெரியவில்லை .
ஊழல் இல்லா இந்தியா என்ற கொள்கையை மட்டுமே முன்னிறுத்தி இவர்கள் செயல்படுவதால் கொஞ்சம் அதிருப்தியே .அரசியல் வாதிகளின் ஊழலால் மட்டுமே இந்திய மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என கேஜ்ரிவால் நினைத்தால் அது முட்டாள்தனமே.எனினும் ஆம் ஆத்மியின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் என் கவனத்தை அதிகம் ஈர்கிறார்கள் .
இந்தியாவிற்க்கு மீண்டும் விடுதலை கிடைக்குமா ?பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இந்த ஆம் ஆத்மி மற்றும் கேஜ்ரிவாலின் புரட்சியை.
About Lokpal:
http://en.wikipedia.org/wiki/Jan_Lokpal_Bill
About Aravind Kejriwal:
http://en.wikipedia.org/wiki/Arvind_Kejriwal
No comments:
Post a Comment