புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே எனும் வாலியின் வரிகள் இளையராஜா இசையமைக்க எழுதப்பட்டது அல்ல இளையராஜாவை பற்றி எழுதப்பட்டதே.
இந்த மனிதனை பற்றி எழுதுவதற்கான தகுதியும் அனுபவமும் இன்றி எனது சிந்தனையும் இசை அறிவும் என்னை ஏளனமாகவே பார்க்கிறது.இருந்தாலும் விடாப்பிடியாக எழுத ஆரம்பிக்கிறேன்.
பாடல் எனக்கு அறிமுகமான காலத்திலிருந்தே A.R.ரகுமானின் பாடல்களின் மீதே அதிக ஈர்ப்பு இருந்த எனக்கு இளையராஜா-வின் பாடல்களின் மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக இருந்தது எனக்கும் எனது அண்ணனுக்கும் நடந்த வாக்குவாதத்தின் முடிவு . "பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்" எனும் பாடல் அவளவு நல்ல பாடல் இல்லை என அவர் சொல்லியது மட்டுமில்லாமல் இளையராஜா தான் சிறந்தவர் என அவர் சொல்ல,எனக்கு வந்த கோபத்தின் விளைவாக , அப்படி என்ன அவர் பெரிய சிறந்தவர் என்ற கோபத்தினூடே கவனிக்க ஆரம்பிதேன் ராஜாவின் பாடல்களை .
வாக்கிங் செல்லும் போது பாடல் கேட்கும் பழக்கமுண்டு,ஒரு ஞாயிறு காலை
பாடல்களின்
தொகுப்பில் ஒரு பாடல் வந்து அந்த நாள் முழுவதையும் அதிலேயே லயிக்க
வைத்தது.வாக்கிங் செல்வதை நிறுத்தி விட்டு ஒரு ஓரமாக அமர்ந்து பன்னீர்
பஷ்பங்கள் படத்தின் ஆனந்த ராகம் கேட்கும் காலம் எனும் அந்த பாடலின் இசையை மட்டும் 6 மணி நேரம் தொடர்ச்சியாக கேட்கவும் வைத்தது.
தூக்கம் வரவில்லை ,! பாடல் கேட்டால் தூங்கி விடலாம் என எண்ணி இவர் பாடல் கேட்க ஆரம்பித்தால் தூக்கம் தொலைந்து போகும் .
ராஜாவின் இசை என்பது அவரது திறமை மட்டும் அல்ல ,அது கடவுளின் வரம்.
எத்தனை மெட்டுகள் வந்தாலும், உன் மெட்டு தரும் போதையை அந்த
போடி மெட்டு கஞ்சா-வால் கூட தர முடியாது !!
போடி மெட்டு கஞ்சா-வால் கூட தர முடியாது !!
விரலிலும், குரலிலும், ஸ்வரங்களின் நாட்டியம்,
அமைக்கும் ராஜாவின் இசைக்கு அடிமையாகி கிடக்கும் அடியேன் -நான்
Raja's Official YouTube Page :
https://www.youtube.com/user/Ilaiyaraajaofficial
About Ilayaraja:
http://en.wikipedia.org/wiki/Ilaiyaraaja
A simple and elegant post :-) ஒவ்வொருவரும் அவருக்குப் பிரியமான படைப்பாளியை மனதளவில் சிலாகித்துக் கொள்வர். நீங்கள் அதை எழுதவும் செய்துள்ளீர்கள். வாழ்த்துகள் :-)
ReplyDeleteamas32