எனக்கு வேலை கிடைச்சிருச்சு





டே கெளம்புரேண்டா ......
மச்சான் வர்ரேண்டா....
.
.
.
.
தினமும் என் நாட்கள் இப்படிதான் கழிகின்றன என்று சிறிய அழுகை கலந்த சிரிப்புடன்
வாசலின் அருகில் நின்று அவர்களை வழி அனுப்பி விட்டு அறையினுள் வந்து அமர்ந்தேன் ......

மெல்லமாக நிசப்தம் என் அறையை ஊடுருவியது .......

மறுநாள் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் ஒரு கைதி கடக்கும் ஒரு இரவின் வெறுமையை உணர்ந்த வண்ணம்
தினமும் இருக்கிறேன் ,சென்னை பட்டினத்தில் வேலை தேடி கொண்டிருக்கும் நான் ......

பனி படர்ந்தது போல் என் நுரையீரலை வருடி சென்றது சிகரெட்டின் புகை .....
தொண்டையை நனைத்தது ஒரு டீ.....
பெரும்பாலான வேலை தேடும் பல இளைஞர்களின் காலை உணவு ....

திரும்பவும் நிசப்தமான என் அறையுனுள் நுழைந்தேன் ....

அந்த தனிமையில் நான் உணர்ந்தது என் நடுத்தர குடும்பத்தின் நிலையை மட்டுமே .....
என் குடும்பத்தில் இரண்டு தங்கைகளுக்கு அண்ணனாகவும்.....
என் தந்தையின் சுமையை குறைக்க இருக்கும் மூத்த மகனாகவும் ....
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க காத்திருக்கும் என் தாய்க்கு மகனாகவும் பிறந்த ஒரு மகனின் பொறுப்பு ,
என் தனிமையின் நிசப்தத்தை மேலும் அதிகப்படுத்தி குறைத்தது......

பல கனவுகளோடு இங்கு வந்த என் கண்களுக்கு ...
தூக்கம் தொலைத்த பல இரவுகளையும், கண்ணீரையும் மட்டுமே பரிசளித்து இருந்தேன் ......

அறையின் நிசப்பதத்தை ஊடுருவியது எனது செல்போனின் ஒலி...,
புதிய எண்...,
என்னை தயார் படுத்திக்கொண்டேன் ,எதிர் பார்த்தது போலவே அது Interview Call ....

நாளை எனக்கு Interview ....


கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்திய அணிக்கு உலக கோப்பையை வாங்கி தரவேண்டிய நிலையில் பந்தை எதிர் கொள்ளும் சச்சின் எவ்வளவு பதட்டத்துடனும் தயாரிப்புடனும் இருப்பாரோ ......

தன் தாய்க்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய போகும் ஒரு டாக்டர் எவ்வளவு பதட்டத்துடனும் தயாரிப்புடனும் இருப்பாரோ ......

அதே பதட்டத்துடனும் தயாரிப்புடனும் அமர்திருந்தேன் நான் ...

என் முறை வந்ததும் உள்ளே அழைக்கப்பட்டேன் .....

வெளியே வந்ததும் பயங்கரமாக அழ தோன்றியது ...

இந்தியா வெற்றி ....ஆபரேஷன் சக்சஸ் .....

தன் முதல் குழந்தையை பிரசவித்து அழும் தாயின் ஆனந்த கண்ணீர் போல் என் கண்களையும் நனைத்தது முதல் முறையாக ஆனந்த கண்ணீர் .....


பார்வை இழந்த ஒருவன் பார்வை பெற்று இந்த உலகத்தை முதல் முறை பார்ப்பது போல் சந்தோசமாக இந்த உலகத்தை பார்கிறேன்.,..

அம்மாவுக்கு முதலில் கூற வேண்டும் ....

தொலைபேசியில் அழைத்தேன் ....
அம்மா... "எனக்கு வேலை கிடைச்சிருச்சு"
ஈன்ற பொழுதினும் பெருதுவத்தால் என் தாய் .....

என் சந்தோசத்தை கவனிக்க இந்த ஊரில் யாரும் இல்லை .....
.
.
நானும் கவனிக்க மறந்தேன்...
!!! ?!!
!!! ?!!
!!! ?!!

வேகமாக வந்த அந்த பேருந்தை .....

என் தாயின் ஆனந்த கண்ணீர் அவள் தாடையை தடவும் முன் அது அவள் அலறலை கண்டிருக்கும்.......

-பிரிட்மன்

3 comments:

  1. Nanba sema story da. very touching. My best wishes for u to write many more stories.

    ReplyDelete
  2. dei pinriyada chozhar paramaparayil oru MLA!!!!!!

    ReplyDelete
  3. super na........ Great.............

    ReplyDelete