நீ என்ன சாப்பாடு விரும்பி சாப்டுவனு என்னிடம் யாரேனும் கேட்டால் தாமதிக்காமல் வரும் பதில் நான் எல்லா சாப்பாடும் விரும்பி சாப்டுவேன் இதுதான் ரொம்ப புடிக்கும்னு குறிப்பா எதுவும் இல்லைனு தான் பதில் வரும்.
சாப்பாடு எங்கள் குல தெய்வம் என கூட சொல்லும் அளவுக்கு பற்றும் மரியாதையும் வரக்காரணம் என் குடும்பமும் என் உறவினர்களும் எனது ஊரும்.
பழைய சோறு (கஞ்சி) எங்களின் முதல் உணவு , காலை மதியம் இரவு என மூன்று வேலையும் அரிசி உணவே சாப்பிடும் ஊராக தான் எங்கள் ஊர் இருந்தது இப்பொழுது தான் இரவு சாப்பாட்டிற்கு தோசை சப்பாத்தி என சாப்பிடும் பழக்கம் மெல்ல நுழைகிறது .
பல ஊருகளுக்கு சுற்றி திரிந்தாலும் பழைய சோற்றுக்கு சுண்ட வைத்த பழைய மீன் குழம்பை வைத்து சாப்பிடும் எங்கள் உணவின் சுவையை மிஞ்சிய ஒரு உணவை எங்கும் காணவில்லை .
எப்டி உடம்ப கூட்டுறது என என்னிடம் கேட்பவர்களும் உண்டு அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே அறிவுரை "எந்த ஒரு உணவையும் வெறுக்காதே" என்பதுதான்.இதை எனக்கு கற்று தந்தது எனது பள்ளி விடுதி வாழ்கை.
10-ம் வகுப்பு வரை வீட்டு உணவையே உண்டு சுவையில் திளைத்த என் நாவிற்கு மரண தண்டனை கொடுக்கும் விதமாய் அமைந்தன என் விடுதி உணவுகள் இருண்டு வருட அந்த விடுதி வாழ்கையில் இட்லி தோசைக்கு சாம்பார் மட்டுமே தரப்படும்,அதுவும் சாம்பாரில் தோசை நன்கு ஊறினால் மட்டுமே சாப்பிட முடியும். சட்னி குடுத்தார்கள் எனில் அன்று எங்களுக்கு திருவிழாதான் எனக்கு தெரிந்த வரையில் நான் அங்கு படித்த இரண்டு வருடத்தில் 3 முறை சட்னியும் இரண்டு முறை சப்பாத்தியும் போட்டார்கள் .
ஒரு சுவை மிகுந்த உணவிற்குதான் நாக்கு எவளவு துடிக்கிறது.அந்த பள்ளி வாழ்க்கை எனது சாப்பிடும் வழக்கத்தை மாற்றியது உணவில் சுவை இருக்கிறதோ இல்லையோ அதுவே அவ்வேளைக்கு இறைவன் தந்த உணவு என சாப்பிட ஆரம்பித்தேன் ..
.உணவின் மீதுள்ள காதல் இன்றும் தொடர்கிறது .. !!
"விரும்பிய உணவை உண்பதை விட, சாப்பிடும் உணவை விரும்பி உண் "