அஃறிணை

ஒரு சிறிய பூகம்ப அதிர்வை அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கு அளித்தபடி விரைந்து சென்றது நான் பயணித்த மின் தொடர் வண்டி.....


பல மனிதர்கள்... பல பாஷைகள்....சண்டைகள்.... எதிரில் அமர்ந்திருக்கும் பெண்கள் ..
ஒரு இனிமையான அனுபவமாகவே ரயில் பயணங்கள் அமையும்......

எனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து ஒரு நீண்ட பயணம், என் ஊரை நோக்கி....

என்னை கிறிஸ்துவன் என்று அடையாலப்படுதிக்கொள்ள கழுத்தில் இருந்த ஜெபமாலையை,என்னை நல்லவன் என்று அடையாலப்படுதிக்கொள்ள எடுத்து வெளியே தொங்க விட்டேன்...எனக்காக மறுபடியும் அவர் முகம் குப்புற கீழே விழுகிறார் .....

பரஸ்பர விசாரிப்புகளுக்கு இடையே பயணம் தொடர்ந்தது......

நேரத்தை கடத்த ஒன்றும் கையில் இல்லை .....எதார்த்தமாக ஒரு புத்தகம் விற்பவர் கடந்து சென்றார்.....
ஆச்சர்யப்பட வைத்தது அவர் வைத்திருந்த புத்தகங்கள்...... "திருவிவிலியம்" ,"ராமபுராணம்","நபிகள் நாயகம்", " God Is Not Great" ,"பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்"
எல்லாம் இரண்டாம் தர விலையில் கிடைத்தன.......


நான் எடுத்தது திருவிவிலியம் .........

தவத்தை கலைத்தது போல் நான் படிப்பதை கலைத்தது அந்த மல்லிகை வாசனை .....
ரயிலின் இரைச்சலை தோற்கடித்தது அந்த கொலுசு சத்தம் ......

நான் தலை குனிந்த படியே அவள் பாதங்களை நோட்டமிட்டேன் ......

அந்த பெட்டியில் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தாள் .....

இடம் தேடி அலைகிறாள் என்று நினைத்துக்கொண்டேன் ....

என் எதிரில் ஒரு இடம் காலியாக இருந்தது, என் பரவசத்தை மேலும் அதிகப்படுத்தியது....

"கடவுளே அவள் என் எதிரில் வந்து அமர வேண்டும்" .......
இப்படி ஒரு பிரார்த்தனையை கடவுள் எதிர்பார்த்திருக்க மாட்டார்.....

குங்கும பொட்டு வைத்திருக்கும் ஆம்பள பசங்கள நம்பக்கூடாதுன்னு அடிக்கடி சொல்வார் என் வாத்தியார்...

பொது இடத்தில் திருவிவிலியம் படிக்கும் ,வைத்திருக்கும் யாரயும் நம்பக்கூடாது என்பேன் நான் ......

என் பார்வை அவள் பாதங்களை நோட்டமிட்டுக்கொண்டே இருந்தது ......

அவள் முகத்தை நான் இன்னும் பார்கவில்லை .....
என் கவனத்தை அவள் பாதங்களை விட்டும் திருப்பவில்லை ........

அவளின் குரலையும், முகத்தையும் மனதில் கற்பனை செய்து கொண்டேன் .....

மெல்ல அவளின் பாதங்கள் என் அருகில் வந்தது....

என் இதய துடிப்பு அதிகரித்தது ....

என் கவனத்தை திருப்ப கைதட்டி கூப்பிட்டால்......

எச்சில் விழுங்கி கொண்டேன் ....
என் மயிர் கால்கள் புவி ஈர்ப்பு விசையை மதிக்கவில்லை.....

நிமிர்ந்தேன் ....அவள் என் கற்பனையை மீறினால் .......

நான் இதுவரை பார்த்திராத முகத்தோற்றம் அவளுடையது.....

சிறிதும் கண் இமைக்காமல் அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன்....

அவள் சிரித்தால் ....காரணம் அறியாமல் என் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.....

"என்ன மாமா அப்புடி பாக்குற ஒரு அஞ்சு ரூபா குடு என்றால் கையை தட்டி கொண்டே"

பதில் தெரியாத மாணவனின் மௌனம் என்னிடம்....

காசை பெற்றுக்கொண்டு நடந்தால் ........

அம்மா "அது " நடக்குறத பாரேன் என்று தனது தாயிடம் சொல்லி ,
ஒரு மானிடப்பிறவியை அஃறிணை ஆக்கினால் ஒரு பெண்...
கண் இருந்த எல்லோரும் அவளை பார்த்து நகைத்துக்கொண்டிருந்தார்கள் .......


"அது" ஆகி இருந்த அவள் யார்....?
என் பிறப்பின் அர்த்தம்  இதுவரை நான் அறிந்திருக்கவில்லையே ,
நான் யார்...?

மானிடப்பிறவி ஆண் ,பெண் என்றால் ஆணையும் பெண்ணையும் கொண்டிருக்கும் அவள்
அஃறிணை போல் ஆனதற்கு யார் காரணம் .....

புத்தகம் விற்பவன் திரும்பவும் நான் இருந்த பகுதிக்கு வந்தான் ....

நான் வாங்கிய புத்தகத்தை மாற்றிக்கொண்டேன்
என் மனதிலும் கையிலும் "பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்"

( இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே ....
யார் மனதையும் புண் படுத்துவதற்காக அல்ல ....)

எழுத்து & சிந்தனை
A.பிரிட்மன் பிரான்கோ

15 comments:

  1. nice writing brother! Finishing is excellent!

    ReplyDelete
  2. Wow. once again very gud writting da nanba. Super

    ReplyDelete
  3. anna awesome.... ly one mistake...instead of satham ..you have written ..கொலுசு சந்தம் .....

    ReplyDelete
  4. Namathu Kalathuraiyadalin "kathai" vadivam.... Story Maker.....

    ReplyDelete
  5. life is worth living...... no ,more commentzzzzzz

    ReplyDelete
  6. Sema Story na.................. Keep it up....

    ReplyDelete
  7. Romba Nalla iruthathu unga எழுத்தும் & சிந்தனையும்

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. அஃறிணை......title is nice......story....great experience thank you.....kept it up anna.....

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete