தவக்காலம் 2013




பெரும்பாலான ஜெப நேரங்களில் உச்சரிக்கப்படும் வார்த்தை உம்  சிறகுகளினால் எங்களை மூடி பாதுகாத்தருளும் ஆண்டவரே  ...!!

அவர் சிறகை முழுதும் இழந்து ஒவ்வொரு இறக்கையாக பிடுங்கி எடுக்கப்பட்டு
 உடல்களில் ஆணி துளைக்கப்பட்டு  ... தலையில் முள் முடியால் அழுத்தப்பட்டு  இறந்து போன காலம் இது....!!

அவர் பிறந்தார் ..நமக்காக இறந்தார் என தெரிந்தும் இந்த உலகத்தின் ஒவ்வொரு செய்தித்தாளும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு கொடும் பாவத்தை செய்தியாக தந்துகொண்டு தான் இருக்கிறது...

ஏசு கிறிஸ்து எனும் ஒருவர் பிறந்து மரித்த செய்தி அவர் உருவாக்கிய திருச்சபை மூலம் நமக்கு அறிவிக்க படாமலும் நாம் அவர் இறைமகன் என நம்பாமலும் இருந்திருந்தால் இன்று எந்த நிலைமையில் இந்த உலகம் இருந்திருக்கும் என்று சிந்தித்து பார்க்கவே முடியவில்லை...


சிறிய தவறு செய்தாலும் மனம் சற்றே வருந்துகிறது ஏசப்பா மன்னிச்சிடுங்க என்று  உரிமையோடு மன்னிப்பு கேட்கிறது   ...என் தேவன் மன்னிக்கும் குணமுடையவர் அதனால் எப்பொழுதும் பாவம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் அவர் மன்னித்து விடுவாரோ ...??

உனக்காக மரித்த தேவன் உன் பாவங்களை மன்னிக்கவும் தயாராகவே இருக்கிறார்.. இருப்பார் ...ஆனால் உனது மனது தூய்மையாய் இருக்கிறதா ..??அதை பகுத்தறிந்து  பார்...

பாவத்தின் சம்பளம் மரணமல்ல ஏசுவின் அன்பு..
நோயற்றவர்களுக்கு அல்ல நோயுற்றவர்களுக்கே மருத்துவர் தேவை என்கிறார் ஏசு .
உன் சகோதரனை 7 முறை அல்ல 70 முறை கூட மன்னிக்கலாம்.நீ எவளவு தூரம் அடுத்தவர் பாவங்களை மன்னிக்கிறாயோ அதே அளவு உன் பாவங்களும் மன்னிக்கப்படும் என்கிறார் ஏசு .



ஒரு அருட் சகோதரி என் தலையில் கைவைத்து ஜெபித்துவிட்டு சொன்னார் .நீ இறைவனிடம் கண்ணீர் விட்டு கதறி அழு உன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று  ...
அவர் என் தலையில் கை வைத்து ஜெபித்த பொழுது நான் மனதிற்குள் என்  பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் ஆண்டவரே  என ஜெபித்து கொண்டிருந்தேன் ...
என்ன நினைத்து ஜெபிதேனோ அதே வார்த்தைகளை அந்த அருட்சகோதரி சொன்ன பொது மெய் சிலிர்த்து விட்டேன் ...
மிக சந்தோசமான தருணம் அது ...ஏனென்றால்  இறைவன் என் பாவங்களை மன்னிக்க தயாராகவே இருக்கிறார் ...!! 

தவக்காலம் மட்டுமல்ல எல்லா காலங்களிலுமே ஏசுவின் இறப்பிற்காக நாம் அழ வேண்டியது நம் கடமையில் ஒன்றாகவே இருக்க வேண்டும் !!

ஏசு இன்றும் நமக்காக  சிலுவை சுமந்து கொண்டுதான் இருக்கிறார் ..அவர் சுமையை நாம் என்று இறக்கி வைக்க போகிறோம் ...???



ஒருவன் செய்த மிகப்பெரிய தவறுக்காக அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது 
ஆனால் நாம் செய்த தவறுக்காக பிறக்கும் பொழுதே மரண தண்டனை பெற்று பிறந்த ஏசுவுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் ???



நம் பாவங்களுக்கு நாம் கொடுக்க போகும் மரண தண்டனையே ஏசுவின் இறப்பிற்கு நாம் செலுத்த போகும் கண்ணீர் அஞ்சலி ..அவருடன் சேர்ந்து நாமும் சிலுவையை சுமப்போம் முடிந்தவரையில் நற்செய்தியை அறிவிப்போம் !! இறைவன் மன்னிக்கும் குணமுடையவர் என அனைவருக்கு எடுத்து சொல்வோம் !! இந்த தவக்காலத்தை பயன்படுத்துவோம்   தியானிப்போம் !! ஜெபிப்போம் !!


-பிரிட்மன்