Elakku

இலக்கு


'இது ஒரு பொன் மாலை பொழுது ....'
இளையராஜாவின் இசையில் ஒலித்த இந்த பாடல் இந்த மாலை பொழுதின் சுகத்தை கொஞ்சம் அழகாக்கியது....

என்ன அவசரம் என்று தெரியவில்லை என்னை இடித்து ஓடிச்சென்றான் ஒருவன்.....

சிரிப்புடன் எழுந்து நடந்தேன் ...

அடுத்த சில நொடிகளில் ......

மெல்லிய வாசனை மிக்க கூந்தல் என்னை வருடி சென்றது .......

அவளை திரும்பி பார்க்க வேண்டும் என்று மிக பெரிய ஆவல் கொண்டேன் ....

இருந்தும் திரும்பாமல் என் இலக்கை நோக்கி நடந்தேன் ......

வழியில் ஒரு கார் இவ்ளோ நீளமான ஒரு காரை நான் இதற்கு முன்பு தொட்டது இல்லை ......

எந்த வித ஆசையும் இன்றி நடந்தேன் ....


அந்த பஸ் ஸ்டான்ட் .....ஹ்ம்ம்....நெருங்கி விட்டேன் ...ஏக கூச்சல் .....என் பேருந்தின் வருகைக்காக காத்திருக்கிறேன் ....

கூட்டத்தால் ஏற்றப்பட்டு, பேருந்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட இருக்கை எனக்கு கிடைக்க பாக்கியம் பெற்று, அமர்ந்து .....
ஒரு நீண்ட தூர பயணம் ,அழைத்து சென்றது என் மனைவியிடம் .....

இன்று நாள் நல்ல படியாக வீடு வந்து சேர்ந்து விட்டேன் என்று அவள் எண்ணியதை அவள் பெரு மூச்சு எனக்கு உணர்த்தியது .....

இரவு சாப்பாடிற்காக என்னை அழைத்தால் என் மனைவி ......

எனக்கு எப்போதும் இரவு சாப்பாடுதான் என்று நினைத்துக் கொண்டே .....
சாப்பிட துவங்கினேன் பார்வை அற்றவனாகிய நான்....



4 comments: