காலை நேரம்...
பேருந்தின் சத்தம் மெல்லமாக என் காதுகளை கவ்வி கொண்டிருந்தது....
பயண நெருக்கடியிலும் ...வேலை அவசரத்திலும்.... கிடைத்த பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தேன் .....
பேருந்தின் சத்தத்தை தொலைக்க அனைவருக்கும் உதவிய செல்போனின் பாடல்கள் எனக்கும் உதவியது...
எல்லா சத்தத்தையும் மீறி ஒலித்தது அவளின் குரல் ......
எண்ணெய் தடவாத பரட்டை கூந்தல்.....
இடுப்பில் சொருகிய சீலை.....
கையில் ஒரு தூக்கு சட்டி ...
ஒரு ஏழை தாயின் அப்பட்டமான பதிவு .....
மௌனம் கலந்த அவளின் உரத்த சத்தம் ...."சார் இந்த பஸ்ல விஜயநகர் போக எவ்வளவு" நடத்துனர் - "அஞ்சு ரூபா மா" .....தூக்கிய தலையுடனே !!!!!நகர்ந்து சென்றால் அடுத்த பேருந்திருக்கு .....
என் பார்வை அவளை நோக்கி நகர்ந்தது ....
அடுத்த பேருந்திலும் அவளின் குரல் ஒலித்திருக்கும்.....
என் நிலையை நினைத்து நன்றி கூறினேன் கடவுளுக்கு.......அவளின் நிலையை நினைத்து பழிக்க தோன்றியது கடவுளை ......
என் முதல் கதைக்கு காரணமானால் அவள்....
-
பிரிட்மன்
அருமை நண்பரே...
ReplyDeleteநல்லா எழுதுங்க...... மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்..
நம் நாட்டின் நிலை... நல்ல கதை...
ReplyDelete