மீனவனும் மனிதன்தானே ...?




 நெஞ்சு  பொறுக்குதில்லையே  இந்த   மானங்கெட்ட  இந்தியாவை  நினைத்து  விட்டால் ....!!!

கூடங்குளம்  அணு  மின்  நிலையம்  கட்ட  ...
12500 கோடி  செலவு  செய்தேன்  என்கிறாய்  அதில்  என்  மீனவனின்  ரத்தமும்  வியர்வையும்  இல்லையா ...?
மீனவன்  வருமான  வரிப்பணம்  கட்டுவதில்லை  என்பதால்  அவன்  என்ன   உனக்கு  மிருகமாகி  போய்விட்டானா ......?!
ஒரு தமிழ் மீனவனிடம் ஒரு 5 நிமிடம் பேசிப்பார் அவனின் வெகுளித்தனமும் ...அப்பாவி குணமும் பாரெங்கிலும் தேடினாலும் காண முடியாது...
காங்கிரஸ் கட்சி மகான்களுக்கு ஒரு கேள்வி ....உங்கள் பெண்ணுக்கு பலகோடி செலவு செய்து திருமண ஏற்ப்பாடு செய்கிறீர்கள் ....திருமணதிற்கு   முந்தின  நாள் அநத மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ்  இருப்பது தெரிய வருகிறதென்றால் ...?
ஐயோ இவ்ளோ செலவு செய்துவிட்டோமே என்று உங்கள் பெண்ணை அவனுக்கு கட்டி வைத்து விடுவீர்களா  ...?
நீ செய்யும் அக்கிரமங்களை பார்த்தால் நீ கட்டி வைத்தாலும் வைப்பாய் .....

மக்களே வேண்டாம் எனும் போது போது அணு மின் நிலையத்தை
வரிந்து கட்டிக்கொண்டு  திறப்பேன் என்று நிற்கிறாயே ?
இதில் எங்கு இருக்கிறது மக்களாட்சி...?

நீ நிரப்பப்போவது யுரேனியம் அல்ல எங்கள் தமிழ் மீனவ இனத்தின் ரத்தம் ....
நீ வைத்திருப்பது  இருப்பது அணு உலை அல்ல எங்கள் உயிருக்கு உலை...
எங்களை எரித்து மின்சாரம் தயாரித்து இந்தியாவை ஒளிர செய்ய போகிறாயா...?

தமிழ்  மீனவனை  என்றுதான்  நீ  மனிதனாக  பார்க்க  போகிறாய் ...?

[New Born Baby in csernobil]

-பிரிட்மன்