நிழல் உலகம்


அய்யா என் புள்ளைக்கு உடம்பு சரி இல்லீங்க நா வீட்டுக்கு போவனும் ....இரவு 11 மணி என்று கூட பாராமல் என்னை வேலை வாங்கி கொண்டிருந்தார் என் முதலாளி யோ ஜோசப் இங்க வாயா !!இத சாப்பிடு .அய்யாவுக்கு வைத்திருந்த சாப்பாடு பொட்டலத்தில் இருந்து எனக்கும் தரப்பட்டது .சாப்பிட்ட சில நிமிடங்களில்... பயபுள்ள steady -யா தான் நிக்குறான் நீங்க சாப்டுங்கயா ..சரி சரி ... நீ கெளம்பு போய் காஷியர்-ட ஒரு 50 ரூபா வாங்கிட்டு போ ....என் வீடு மிகவும் பக்கம் என்பதால் எங்கள் பாக்டரி கழிவுகளையும் நாற்றமடித்த தெருக்களையும் தாண்டி வீட்டிற்கு வந்தடைந்தேன் ...

என் மகனுக்கு வந்திருந்தது போன்ற ஒரு நோய் தொற்று எங்க ஏரியா-ல புதுசா பொறக்குற கொழந்தைங்க எல்லாருக்கும் வந்திருந்திச்சு ...நானும் பாதிக்கப்பட்டு இருந்தேன் ஆனால் பழகிப்போனது.... நிலத்தை மேம்படுத்தும் மண்புழு போல நாங்கள் அந்த இடத்தை சுத்தம் செய்தோம் ...ஆனாலும் இடம் மாசு பட்டு கொண்டுதான் இருந்தது ...பக்கத்தில் இருக்கும் அணு உலை கழிவுகள் எங்களை நோய்க்கு ஆளாக்கின ... எங்க புள்ளைங்களுக்கு வேலை வாங்கி தருகிறோம் என்று சொல்லி அரசு கட்டிய மரண உலயையாம் இந்த உலை ...இப்புடி தான் ஒரு அரசியல் வாதி பேசி சென்றார்... எவனும் தன் பிள்ளை உண்ண மீனை கேட்டல் பாம்பை கொடுப்பானா ? ...அனால் அரசு எங்களுக்கு நஞ்சுள்ள பாம்பை கொடுத்தது ...இதை மூட பல போராட்டங்கள் செய்ய சில படித்தவர்களால் பணிக்கப்பட்டோம் ... அனால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் எங்களை எதிரிகளாக பார்க்க செய்தது அரசு ..எனவே யாரும் கேக்க நாதியிள்ளவதர்கலாகவே இருந்தோம் ... உறக்கம் மட்டுமே நிம்மதி ...அடிச்சிப்போட்ட மாதிரி உடம்பு வலியுடன் கொசுக்கடியிலும் நிம்மதியான உறக்கம் ...ஆழ்ந்த உறக்கம் ...அதில் வரும் கனவு தான் எங்களுக்கு நிம்மதி ....மாதம் இருமுறை அணு உலையில் இருந்து வரும் அபாய ஒலி வரும் ...நாங்கள் போர்வை போர்த்திக்கொள்வோம் அதுவே எங்களுக்கு பாதுகாப்பானதாக தெரிந்தது ..எங்களுக்கென்ன தெரியும் அணு உலையின் விபரீதம் தெரிந்திருந்தால் இதை கட்ட அனுமதிதிருப்போமா ??...பாதுகாப்பு பொருட்கள் -னு சொல்லி அரசுட்ட இருந்து ஒரு முகமுடியும் இந்த போர்வையும் தான் கொடுத்தாங்க....அன்றும் அபாய ஒலி ஒலித்தது ..என் மனைவி பதறி ஜெபம் செய்ய தொடங்கினால் ...நான் போர்வை போற்றிக்கொண்டேன் ... ஆழ்ந்த உறக்கத்தில் ...

கும்மிருட்டான ஒரு இடத்தில எங்க ஊர் காரங்க எல்லாம் நின்று கொண்டிருந்தோம் . ஒரே குளிராக இருந்தது. கண்ணுக்கெட்டிய வரையில் இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. திடீரென தென்றலில் மிதந்து வரும் மணிகளின் சப்தம் இனிமையாக ஒலித்தது ஒரு வித மனத்தைச் சுமந்து கொண்டு வந்தது தென்றல். அதே வினாடி தரையிலிருந்து பலவிதமான செடிகொடிகள் முளைத்துத் தழைத்தன.கண்ணெதிரிலேயே மரங்களும், செடிகளும் காய்த்துக் குலுங்கின. நாரைகளும், காட்டு வாத்துக்களும் கிறீச்சிட்டுக் கொண்டு பறந்து வந்தன. சிட்டுகள் மரங்களின் உச்சியிலே கூடு கட்டத் தொடங்கின. அணில்கள் மரங்களின் உச்சியிலே கூடு கட்டத் தொடங்கின. அணில்கள் வாலைத் தூக்கிக்கொண்டு காடெங்கும் ஒலிக்கும்படியாகப் பேசின. ஆட்டு மந்தைகளின் மணிகள் ஒலித்தன. மரங்களெல்லாம் சிவப்பும், நீலமும், மஞ்சளும், ஊதாவுமாகப் பூத்துக் கொண்டிருந்தன.பூக்கள் தரையெங்கும் விழுந்து பரவி விதவிதமான வர்ணம் காட்டின. ஏதோ மாயமான ரத்ன கம்பளம் விரித்தது போல் இருந்தது.காலடியில் பூக்கள் பூத்தன ... குனிந்து காலடியில் பூத்திருந்த ஒரு பூவைப் பறித்தேன் . அதை நான் கையில் எடுத்துக்கொண்டு நிமிர்வதற்குள் பூ, காயாகி மாறிப் பழுத்து விட்டது. திடீரென குளிர் மறைந்து விட்டது. வஸந்தத்தின் உஷ்ணம் ஆரம்பித்தது , மனசுக்கும் உடம்புக்கும் குளுமையான உஷ்ணம் பரவியிருந்தது எங்கும். தெய்வீகமான ஒளி எங்கும் பரவி நின்றது. ஒரு சிறு குட்டையில் நீந்திக் கொண்டிருந்த வாத்துகள் க்ளக் க்ளக் என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. வஸந்தத்தின் இனிமை காற்றிலே நிறைந்திருந்தது. தாமரைகள் ஆகாயத்திலே மிதந்து வருவது போல பலவித வர்ணமான வண்ணத்தப் பூச்சிகள் அங்கும் இங்கும் பறந்தன. ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தின் பொந்திலிருந்து தேனடை நிரம்பி வெளியே வழிந்து சொட்டிக் கொண்டிருந்தது. அழகான மலர்ச் செடிகள் எல்லாம் அந்த இடத்தை தெய்வீகமான அழகு கொண்டதாகச் செய்தன. சில மலர்கள் பொடிப்பொடியாக நவரத்தினங்கள் போல் ஜொலித்தன. ரோஜாக் கொடியொன்று மலையடிவாரத்தில் முளைத்து மலையுச்சிவரையில் ஒரே நொடியில் படர்ந்தது நெடுகிலும் கண்ணைப் பறிக்கும் வண்ணமலர்கள் பூத்துக் குலுங்கின ஒளி அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து மேலும் வந்தன. அந்த இடம் ஒளியால் நிறைந்து பிரகாசம் பெற்றது. நிமிர்ந்து பார்ப்பது சிரமமான காரியமாக இருந்தது கோடி சூரியப்பிரகாசம் என்பார்களே அது போல , தூரத்திற்கப்பாலிருந்து யாழ் மீட்டப்படுவது போல சத்தம் கேட்டது அத்துடன் இசைந்து பலர் பாடுவது போலவும் இருந்தது. அந்த யாழையும், இசையையும் என்னவென்று சொல்லுவது? தெய்வீகமானது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த யாழும், குரலும் இசைந்து மனசையும், இதயத்தையும், ஆத்மாவையும் உருக்கிற்று உருகிப் பாகாய் ஓடச் செய்தது. அதனிடையே ஒரு தெய்வீக குரல் இடி முழக்கத்துடன் இதுவே இனிமேல் உங்களுக்கான இடம் என்று சொல்லி மறைந்தது ... எல்லா வற்றையும் ரசிக்க போதுமான ரசனை எங்களுக்கு இல்லை... நடந்து சென்றோம் அருவியிநூடே அருவியின் சத்தங்களுக்கிடையே கதறல் ஒலி ஒலித்தது ....முன்னேறி சென்றோம் ...அங்கே என் முதலாளியும் அவர்கள் வேலை ஆட்களும் கட்டப்பட்டிருந்தார்கள் ..கருப்பு ஆடைகள் அணிந்த சிலர் அவர்கள் அடித்துக்கொண்டிருந்தார்கள் ...என் மனைவி இது தான் நரகம் போலங்க மொதலாளி பாவம் என்றால் ..நானும் ஆமாம் என்ற வாரே நகன்றேன் ...சிறிது நேரம் கழித்து இரைச்சலான சத்தம் ஒன்று கேட்டது என்ன தேன்றரிய அருகில் சென்று பார்த்தோம் ....அருகில் செல்ல செல்ல எங்கள் ஊரின் துர்நாற்றம் வீசியது ..ஒரு பள்ளத்தில் எட்டி பார்த்தோம் ...ஏங்க அது நம்ம ஊர் தான் போலங்க என்று என் மனைவி சொன்னால் ...ஆமா எங்க ஊர்தான் ...!! ஆனால் நாங்கள் போராட்டம் பண்ணியும் வராத தலைவர்களெல்லாம் வந்திருந்தாங்க ..ஒரே ஆம்புலன்ஸ் சத்தம் ...முகமுடி அணிந்த பலர்.... எங்கள் ஊர் மக்கள் அனைவரும் வெள்ளை நிற துணியால் சுற்றப்பட்டிருன்தனர் ...
அம்மா யாருமே உயிரோட இல்ல நிதியுதவி ஏதும் தேவ இல்ல என்றான் ஒருவன் அங்கிருந்த ஒரு தலைவி காதில் ..... டர்பன் போட்ட ஒரு ஆள் நின்று கொண்டிருந்தார் சார் மே ஹமாரா மர்கய தா அது இது னு ஏதோ அவரிடம் சொன்னான் அவர் தலை கூட அசைக்கவில்லை .... ஒரு வயதானவர் கண்ணாடி போட்டு வந்து கவிதை மொழியில் பேசினார் ...அவர் துக்கம் விசாரிக்கிறாரா இல்ல நலம் விசாரிக்கிறாரா என்று சுற்றி இருந்தவர்கள் முழித்தனர்... ஏங்க எல்லாம் பெரிய மனுசங்க போல இவங்கல்லாம் இவ்ளோ நாள் எங்க இருந்தாங்க என்று வினவினால் மனைவி ... எனக்கு அங்க என்ன நடக்குன்னு புரியல ...எங்கள் வீட்டை தேடினோம்..எங்கள் வீட்டில் நான் ,மனைவி என் குழந்தை மூவருமே மூச்சில்லாமல் கிடந்தோம் ....சில மணித்துளிகளில் எங்கள் கண்முன் இருந்த எங்கள் ஊர் மறைய தொடங்கியது ...தூக்கத்தில் இல்லை என்பதை உணர ஆரம்பிதேன் ...எங்கள் ஊர் மறைந்து கொண்டிருக்கும் போதே ஒலித்தது ஒரு சிறுவன் கூவிய சத்தம் ...!!!...நியூஸ் பேப்பர்!! நியூஸ் பேப்பர்!! ..."கூடன் குளம் அணு உலை டமால் " நியூஸ் பேப்பர் !! நியூஸ் பேப்பர்!! யாருமே இல்லாத கடைக்கு யாருக்குப்பா டீ ஆத்துற ...!! ?? என்றான் ஒரு இளைஞன் ... எங்கள் மரணம் விளம்பரமாகவும் கேலியாகவும் ஆகிக்கொண்டிருந்தது ....!! -தொடரும்

- கற்பனை & எழுத்து
பிரிட்மன்
நன்றி :
தேவமலர் by ஸெல்மா லாகர்லெவ்
தமிழ் பதிப்பு
[For me(writer's review hahah :) )::--> I missed something in this story...i felt ,its not a good as much, like my previous list of stories if compare.but i gave my best-Please Review this one]