7th Floor

7 -வது மாடியில் என் காதல்

"பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் ...."
என் இதயத்தின் வெற்றிடத்தை அதிகப்படுத்தியது போல அந்த பாடல் ஒலித்தது ,நான் பயணித்த அந்த பேருந்தில் ...

மார்கழி மாதம்...

அதி காலை குளிரின் இதத்தில் எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்க ...வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த எனக்கு மட்டும் வியர்த்து வழிந்தது ...

மதுரை பேருந்து நிலையம் இறங்கியவுடன் ஆசுவாச படுதக்கூட மனமில்லாமல் ஓடி சென்றேன் அந்த மருத்துவமனைக்கு ...

வரவேற்பறையில் இருந்த செவிலியப் பெண்ணிடம்...
" ஹ்ஹ்ஹ் ஹரிணி எங்க இருக்காங்க .."

:No 143 H ..7 th floor ...

தடுமாற்றமும் ,பதற்றமும் ,கண்ணீரும் என் இதய துடிப்பை அதிகரித்த போதும் அது அவளுக்காகவே துடிப்பது போல் விழுந்தோடி சென்றேன் 7 வது மாடி நோக்கி ...
ஹரிணி என் வாழ் நாளில் நான் அதிகம் உச்சரித்த எழுதிய ,type செய்த பெயர் ..

நாங்கள் மதுரை-க்கு குடி பெயர்ந்து , நான் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலேயே எங்கள் முதல் சந்திப்பு ..

பார்த்தவுடன் காதல் வந்திருச்சு என்று சொல்லும் நண்பர்களிடம் கோபம் கொள்ளும் எனக்கு ... அவளை
பார்த்தவுடன் பிடித்துப்போனதென்னவோ உண்மை ....
அனால் என் காதலை அவளிடம் சொல்ல நான் 2 வாரம் எடுத்துக்கொண்டேன் ...

Lab ல என்னோட batch..மிகவும் அமைதியாக இருப்பாள் ஹரிணி .அதுவே எனக்கு பிடித்துப்போனது ....


அவளின் நண்பனாக பழக வாய்ப்பு கிடைத்தும்
நண்பனாக அவளிடம் பழகி ..பின்பு காதலை சொல்லி ..நட்பை கொச்சைப்படுத்த விரும்பாமல் நேராக என் காதலை சொல்ல தீர்மானித்தேன் ...


பெண்களை ரசிப்பதை விரும்பாதிருந்த எனக்கு அவளின் கண்கள் மிகவும் பிடித்திருந்தது ...
அவள் விழி அசைவு என்னைக் கொன்று செல்லும் ....கீழ் விழியில் படந்திருக்கும் ஈரச்சுவை அவளின் மேல் இமை ருசிக்கும் அழகை நாள் முழுவதும் ரசித்துக்கொண்டிருந்தேன் ...

சூரிய கிரகணம் போல் அவள் கண்கள் மூடி திறக்கும் அழகு ...
கல்லூரியில் யாரையும் அவள் பெரிதாக கவராத போதும்
அவள் எனக்கு தேவதையாக தெரிந்தால் ...


எனக்குள் காதல் பூத்த தருணம் நான் அறிந்திருந்தேன் ,ஆனால் எனக்கு விவரிக்க தெரியவில்லை ..விவரிக்க தெரிந்திருந்தால் உலகின் கவிஞர்களுள் முதல்வன் ஆகி இருப்பேன் ,....இல்லை இல்லை உலகின் முதல் கவிஞனே நானாக இருந்திருப்பேன் ...காதல் தோன்றும் உணர்வை வர்ணித்தால் அவனல்லவோ கவிஞன் ...

ஒரு நாள் என்னை அவள் கடந்த போது சிரித்த அந்த சிரிப்புதான் என் காதலை அவளிடம் சொல்ல தூண்டியது ...
தனிமை விரும்பியான எனக்கு அவளின் தனிமை மிக பிடித்திருந்தது ..
எங்க batch List பார்த்து தான் அவள் பெயரைக்கூட தெரிந்து வைத்திருந்தேன் ...


அவளுக்கு கண்டிப்பாக என் மேல் நல்ல அபிப்ராயம் இருக்கும் அதை கெடுத்துக்கொள்ள வேண்டுமா ?
அவளுக்கு என்னை பிடிக்குமா ? என சில கேள்விகள் குடைந்த போதும் ...

ஒரு நாள் அவள் முன் சென்று நின்றேன் ..."உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் evening கொஞ்சம் wait பண்ணுங்க "
அவள் எதுவும் பேசவில்லை ...மௌனம் சம்மதம் என்று நினைத்தவனாய் வகுப்பறையில் அமர்ந்திருந்தேன் ..

என் வாழ்நாளில் மிகப்பெரிய நாள் அது ...
என் கை கடிகார முள் நகருவது போல் நடித்தது ...
என் மொபைல்-இன் Unlock button தேய்ந்து போனது ..ஆனால் நேரம் தேய மறுத்தது ..
நேரம் நெருங்க நெருங்க பதற்றமாநேன் ...
3:15 pm...என் எதிரில் அமர்ந்திருக்கிறாள் ஹரிணி .
humming bird -இன் இதய துடிப்பை நெருங்கி கொண்டிருந்தது என் இதயத்துடிப்பு ...காதலின் அடையாளத்திற்கு எதற்கு இதயத்தை தேர்தெடுத்தார்கள் என்று புரிய ஆரம்பித்த தருணம் அது ,....அவளுக்காக இப்படி துடிக்கிறதே ?!

கேள்வி நிமித்தமாக இரு புருவங்களை உயர்த்தினால் ...

இதயம் என் அடிவயிற்றில் இறங்கிய உணர்வு ...மயிர் கால்கள் அனைத்தும் ஜில்லிட்டு எழும்பியது ...100 mtr race ஓடினவன் போல் மூச்சிரைக்க திணறி திணறி ...வார்த்தை கவ்விக்கொண்டே தலைகவிழ்த்த வன்னம் ....

நீங்க ....நீங்க ....நீங்க ....யாரையாச்சும் love பண்றீங்களா ?..

காதலை சொல்லும் இடங்களில் இரு பாலரும் அடுத்தவர் மேல் இருந்த சிறு நம்பிக்கை இழக்கிறோம் அல்லது பெறுகிறோம் ..அவளின் பதிலை எதிர் பார்க்கும் நிமிடம் மிக அழுத்தமாக நகன்றது ...தலை நிமிர்தேன் , சிறிது தைரியத்துடன்
சொல்லுங்க ஹரிணி யாரையாச்சும் ??!!
சிறிது புன்னகைத்து இல்லை என்ற பாவனையில் தலையாட்டினாள்.. வைரமுத்து, எனக்காக மட்டுமே காதல் பாடல்கள் இயற்றியது போன்ற ஒரு உணர்வு .. ஜில்லிட்டேன் .

எனக்கு உங்கள பிடிச்சிருக்கு ஹரிணி think பண்ணி சொல்லுங்க ப்ளீஸ் ..

கொஞ்சம் திமிரானவனான எனக்கு அவளிடம் கெஞ்சுவது பிடித்திருந்தது...

முதல் பதில் அவளிடமிருந்து ...
சைகையில் ஏதோ சொன்னால் ...

அவள் விழியின் ஈரம் அறிந்தவனாய் .What ??!!...are you ??!!

திரும்பவும் அதே செய்கை காட்டினால் ...

அவளை இவ்வளவு அழகாக படைத்த இறைவனுக்கு அதற்க்கான குரலை கண்டு பிடிக்க முடியவில்லயோ என்னவோ ...

உனக்காக நான் பேசுவேனே ஹரிணி ..I love you...

இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு ..நாங்களும் காதலர்கள் ஆனோம்...இல்லை !! திருமணம் செய்யப் போகிறவர்கள் ஆனோம் ...



காதலர்கள் எனக்கு பிடித்ததில்லை ...பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி எப்படி என்று எண்ணிக்கொண்டிருந்த நானும் காதலில் ....!!?
எங்கள் வீட்டில் பல போராட்டங்களுக்கு பிறகு என் பெற்றோரின் கனவை சிதைத்து அவர்களிடம் ஹரிணி - யை அறிமுகம் செய்தேன் .என் மீது என் பெற்றோர் வைத்திருந்த அன்பினால் நான் ஹரிணி மீது கொண்ட அன்பு அவர்களுக்கு பிடித்துப் போனது ...
Mobile குறுந்த தகவலில் எங்களின் இரவுகள் கழிந்தன ..

எல்லாருக்கும் பிடித்துப் போனவர்களாய் கல்லூரியில் வலம் வந்தோம்...

15 நாள்விடுமுறை நிமித்தமாக சற்று பிரிய நேரிட்டது....
விடுமுறை கழிக்க நான் சென்னை சென்று விட்டேன்
பிரிவு எங்கள் அன்பை மேலும் அதிகப்படுத்தியது ...

நேற்று ...

இரவு 8 மணி ஹரிணி number-இல் இருந்து phone...முதல் இன்கமிங் போன் ..ஆச்சர்யமும் ..பதட்டமுமாக ...

"ஹ்ஹ ஹ்ஹ ஹரிணி ..என்றேன் "
மறு முனையில் ..."டே யாரடா நீ நாயே ..ஊமை புள்ளைய இப்புடி கெடுத்து வச்சிருக்கியே டா பரதேசி ***** பயலே ..கைல கெடச்ச உன்னைய வெட்டாம விட மாட்டேண்டா "
பின்னால் ஹரிணியின் அழுகை சத்தம் ...
மொபைல் உடையும் சத்தத்தோடு போன் கால் துண்டிக்கப்பட்டது ...

நரகம் எப்படி இருக்கும் எனத் தெரியாது .. ஆனால் நான் அனுபவித்த வேதனையை விட நரகம் கண்டிப்பாக கொடுமையாக இருக்காது ...

"திரும்பவும் ஒரு போன் "அடே பாவி என் மகளை கொன்னு புட்டியே நீ நாசமா போவ "

பதறி துடித்தேன் ...நிலைமை அறிய நண்பனுக்கு அழைத்தேன் அடுத்த சில மணி துளிகளில் ...

"டே ஹரினிய அவங்க சொந்த காரங்க அடிச்சிருக்காங்க அவ suicide attempt பண்ணிக்கிட்டத சொல்லறாங்க மலர் hospital ல வச்சிருக்காங்க ...""
பல நினைவுகளும் கற்பனைகளும் என்னை திணறடித்தது ...

இன்று ...

படிகளில் விழுந்து எழுந்து ஓடி சென்றேன் ...7 -வது மாடி ....
ஏசு இறை மகன் என அறிந்தும் அவரை சிலுவையில் அறைந்த கொடூரர்கள் போல் குணம் கொண்டவர்களிருக்கும் floor -இல் ஓடிகொன்டிருக்கிறேன் ....

பல நாள் பசித்திருந்த சிங்கள ராணுவ பெட்டை நாய்கள் எல்லை தாண்டும் மீனவனை எவ்வளவு கொடூரமாகவும் வக்கிரமாகவும் பார்க்குமோ அதே தொனியில் அவர்களின் கண்கள் பட்டது என் மேல் ..

அவர்களின் அடி பட்டு உதடுகள் பிய்ந்து தொங்கிய நிலையில் ..சட்டை கிழிந்து பதறி துடித்து அவளின் அறைக்குள் விழுந்தேன் ..

எவனும் தன் அன்புக்குரியவளை இப்படி காண சகிக்க மாட்டான் ...

முகத்தில் ரத்த ரேகைகள் பிளந்தோட நினைவறியாமல் கிடத்தப்பட்டிருந்தால் என் ஹரிணி ...

ஊர்ந்து அவளருகே சென்றேன் ..
அவளின் கையை பற்றினேன் எங்களின் முதல் ஸ்பரிசம் இது மாதிரி அமையும் என்று கனவிலும் நினைக்கவே இல்லை ...
கண் திறந்தாள்...அழுதால் .. விக்கினேன்....
சரி ஆகிடும் ..சரி ஆகிடும் ....சரி ஆகிடும் ஹரிணி ..
ஆமோதிப்பது போல் தலை ஆட்டினால் ...
தலை வேகமாக ஆட ஆரம்பித்தது ..
"என்ன ஹரிணி என்னாச்சு .."
கை ...கால்...
என்று உடல்முழுவதும் ஆட ஆரம்பித்தது ....

டாக்டர்... patient ku Fits என்று செவிலி கத்தினால் ....

உலகம் சற்று இருண்டு போனது எனக்கு ...
ஹரிணி in பார்வை என்னை விட்டு அகலவில்லை ....
அவளை தவிர எனக்கு எதுவும் தெரியவில்லை ...கதறி அழுதேன் ...
pulse rate குறையுது மேடம் ...
பீபீபீபீபீப்ப்ப் என்ற ஒலி என் காதுகளை கிழிக்க ...............
நிசப்தம் அறையை நிரப்பியது ....ஹரிணி தனியே விடப்பட்டால் ..அவள் கண்ணின் ஒளி மட்டுமே அறையை நிரப்பி இருப்பது போல் ஒரு உணர்வு ...
என் கண்கள் வெறித்தன ...ஹ்ஹ ஹ்ஹ ஹரிணி..நானும் வர்ரேன் ஹரிணி ...விட்டு போகாத என்ற என் கதறல் அறையை கிழிக்க
அந்த 7 மாடி உயரம் எங்களை சேர்க்க போது மானதா இருக்கும் என்று உணர்தேன் ...
தரையில் இருந்து மிக உயரத்தில் ஜன்னலோரம் தெரிந்த அவளின் விரல் நுனி பார்த்துக்கொண்டே இருக்க என் தலையில் இருந்து வழிந்தோடிய குருதி என் விழி மூடியது ....


கற்பனை & எழுத்து
அ.பிரிட்மன்